Editorial / 2019 நவம்பர் 03 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து அதனை சமூக இணையத்தளத்தில் வெளியிட்டமை, மற்றும் அவற்றை பரிமாறிய நபர்கள், இருவர் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர, இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகள் இடம்பெறுகின்றன.
நேற்று முன்தினம் இடம்பெற்ற தபால்மூல வாக்களிப்பின் போது வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெக்கிராவை, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுகளுக்க உட்பட்ட ஆசிரியர்கள் இருவரும் கம்பளையில் பாடசாலை காவலாளி ஒருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026