2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வாட்ஸ்அப் ஊடாக போதை பொருள் வியாபாரம்

Mayu   / 2023 டிசெம்பர் 21 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் வாட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தனர் என்ற  குற்றச்சாட்டில் கைதானவர்களில் இருவரை பொலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்று தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அதன் போதே சந்தேகநபர்கள் வாட்ஸ் செயலி ஊடாக மாணவர்களுடன் தொடர்புகளை பேணி , போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.

மேலும் பல மாணவர்கள் இவர்களுடன் தொடர்புகளை பேணி வந்துள்ள நிலையில்  அவர்களை இனம் காணும் நடவடிக்கையையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X