2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் பாலகியும், சிறுவனும் படுகாயம்: ஐவருக்கு காயம்

Editorial   / 2024 ஜூலை 01 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 காரொன்றும் வேனொன்றும்  நேருக்கு நேர் மோதியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பண்டாரகம - களுத்துறை வீதியில் கல்துடே மரகஸ் சந்தியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற வேனும், காரொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்களில் 8 மாத குழந்தையும் 2 வயது ஆண் குழந்தையும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் காரின் சாரதி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காரின் முன் இருக்கைக்கு அருகில் ஓட்டுநருக்கு சொந்தமானது என நம்பப்படும் ஓட்டுநர் உரிமம் அடங்கிய பணப்பையை பொலிஸார் மீட்டுள்ளனர்.

தற்போது சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X