2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

விமலுக்கு மீண்டும் அழைப்பாணை

Simrith   / 2025 ஒக்டோபர் 13 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் (NFF) தலைவருமான விமல் வீரவன்சவை இன்று (12) மீண்டும் வாக்குமூலம் அளிக்குமாறு தங்காலை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இருப்பினும், இன்று ஆஜராக இயலாமை குறித்து பொலிஸாருக்கு அறிவித்ததாகவும், வேறொரு நாளில் ஆஜராவதாகவும் வீரவன்ச ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர், "புவக்தண்டாவை சனா" என்று அழைக்கப்படும் ஒருவரின் அரசியல் தொடர்புகள் குறித்து தங்காலை குற்றப்பிரிவுக்கு அவர் முன்னர் அளித்த அறிக்கையை திரிபுபடுத்தி பொதுவில் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்து சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X