Janu / 2024 மே 26 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை , பேஸ்லைன் வீதியில் பண்டாரநாயக்க சுற்றுவட்டத்திற்கு அருகில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேலியகொட, நெல்லிகஹவத்த பகுதியைச் சேர்ந்த டி . லுக்ஷான் என்ற 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் தனது நண்பர்களுடன் வெசாக்கை பார்வையிடுவதற்காக ஒருகொடவத்தை வீதிக்கு சென்று கொண்டிருந்த போது , காதல் உறவின் அடிப்படையில் ஏற்பட்ட தகராறில் சிலர் அவரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
11 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago