2026 மே 01, வெள்ளிக்கிழமை

வெறுங்கையுடன் திரும்பினார் அசாத்

Editorial   / 2021 மார்ச் 15 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சட்டத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றைத் தெரிவித்தமை தொடர்பில், முன்னாள் மேல் மாகாண ஆளுநரும் தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவருமான அசாத் சாலியிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தவுள்ளனர்.


'அந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது' எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக கொழும்பு-கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்துக்கு அசாத் சாலி, நேற்று (14) சென்றிருந்தார். எனினும், சர்ச்சைக்குரிய கருத்துத்தொடர்பில் எவ்விதமான முறைபாடுகளும் கிடைக்காமையால், வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள முடியாதென, பொலிஸார் அவரைத் திருப்பி அனுப்பிவிட்டனர். 

முறைப்பாடொன்று கிடைக்காத நிலையில், குற்றவியல் சட்ட ஏற்பாடுகளின் கீழ், எந்தவொருவரிடம் இருந்தும் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாதெனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடுகள் பல கிடைத்துள்ளனவென, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .