Editorial / 2018 ஒக்டோபர் 31 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
 ஹெரோய்ன் விற்பனை மூலம் 170 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதை வர்த்தகர் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேல்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

குறித்த வழக்கின் விசாரணை கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராய்ச்சி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த வழக்கின் பிரதிவாதிகள் 13ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஹெரோய்ன் விற்பனை மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு கோட்டே, தெஹிவளை, ராஜகிரிய பகுதிகளில் 170 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணி மற்றும் சொத்துக்களை சேர்த்ததன் மூலம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றமெனத் தெரிவித்து, வெலே சுதா உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான வெலே சுதாவுக்கு மற்றுமொரு போதைப் பொருள் வழக்குத் தொடர்பில் மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago