2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தில் மூழ்கியது கிளி​நொச்சி

Editorial   / 2023 டிசெம்பர் 15 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சியில், பெய்த கடும் மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சியில் வியாழக்கிழமை (14) கடும் மழை பெய்தது. இதனால், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கணை ஆகிய பிரதேசங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ள்ளாகியுள்ளனரை். பலர்  தங்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

அத்தோடு  தர்மபுரம் மத்திய கல்லுரி மற்றும் தருமபுரம் இலக்கம் ஒன்று
பாடசாலைக்கு உள்ளும் மழைநீர் உட்புகுந்தமையால்  இப் பாடசாலைகளுக்கு  இன்று(15)  விடுமுறை வழங்கப்பட்டது.

பாதிப்புக்கள் தொடர்ப்பாக கிராம சேவையாளர் பிரதேச செயலகங்கள் விபரங்களை பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .