2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வெள்ளைச் சீனியின் விலை குறைந்தது

Editorial   / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தையில் வெள்ளைச் சீனியின் விலை, இன்று (13) நள்ளிரவு குறைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நேற்று (12) வெளியிட்டுள்ள இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் இந்த விலைக் குறைப்பு இடம்பெற்றுள்ளது.

புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, வர்த்தகர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோர் பொதியிடப்படாத ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியை 100 ரூபாய் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்.

அத்துடன், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் ஆகக்கூடிய விலை 105 ரூபாயாகும்.

இந்த விலைக்கட்டுப்பாட்டை மீறி விற்பனை செய்வோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .