Editorial / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
 நீதிமன்றத்தை அவமதித்தாகத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனியவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைபாட்டை அடுத்த வருடம் மார்ச் மாதம் 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சிவில் அமைப்புகளைச் சேர்ந்த கலாநிதி சரத் விஜேசூரிய மற்றும் காமினி வியங்கொட ஆகியோரே பாதெனியவுக்கு எதிராக முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.
குறித்த முறைபாடு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான பிரிதி பத்மன் சூரசேன, அர்ஜுன ஒபேசேகர ஆகியோரால் பரிசீலணைக்கு உட்படுத்தப்பட்ட போது இந்த முறைப்பாட்டை விசாரிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சைட்டம் வழக்கு தொடர்பில், வைத்தியர் பாதெனிய கொழும்பில் இடம்பெற்ற பொதுமக்கள் கூட்டமொன்றில் பல விமர்சனங்களை வைத்தியர் வெளியிட்டதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட பாதெனிய தொடர்பில் விசாரணைகள் நடத்தி அவருக்கு எதிரான தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் முறைப்பாட்டாளர்கள் தமது முறைபாடு மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago