Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரகசியப் பொலிஸாரால் தன்னை கைதுசெய்து தடுத்து வைத்தமை, சட்டவிரோதமானதென அறிவிக்குமாறு, குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபியால் தாக்கல் செய்யப்பட்ட, அடிப்படை உரிமை மனுவை ஆராய்வது 27ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
குறித்த மனு இன்றைய தினம் நீதிபதிகளான, சிசிர டீ ஆப்ரு, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோரால் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை திருத்தம் செய்வதற்கான திகதி ஒன்றை வழங்குமாறு, மனுதாரர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பையிஸ் முஸ்தபா நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இதற்கமைய, மனுவை திருத்தம் செய்வதற்காக நீதிபதிகள் அனுமதி வழங்கியதுடன், அந்த மனு மீதான விசாரணையை 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கவும் தீர்மானித்தனர்.
10 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
25 minute ago
1 hours ago