2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

ஸ்பாவுக்குள் நுழைந்து 3 அழகிகள் வன்புணர்வு: கான்ஸ்டபில் கைது

Editorial   / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மசாஜ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு பணிபுரியும் மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்ற இரண்டு  கான்ஸ்டபிள்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளையில் உள்ள மசாஜ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து பெண் மேலாலர் மற்றும் நான்கு பெண்களை அச்சுறுத்தி, அதில் மூன்று பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். 

பொலிஸ் சிறப்பு பணியக தலைமையகத்தில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர், அந்த மாடியில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது, மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் அவர் பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார்தெரிவிக்கின்றனர்.

மேலும் சம்பவத்தில் தப்பியோடிய நபர், காவல்துறை சேவையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு கான்ஸ்டபிள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸ் மற்றும் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .