Editorial / 2019 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு கட்சிகளும் இணைந்து எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு கூட்டணி அமைப்பது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமையும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கெனவே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடையில் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.
எனினும், கூட்டணி தொடர்பான இறுதி முடிவு எட்டப்பட்டிருக்கவில்லை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தலைமையில் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்ப்பில், பொதுச் செயலாளர் தயசிறி ஜெயசேகர எம்.பி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர எம்.பி. மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான லசந்த அழகியவன்ன ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக அறியமுடிகின்றது.
18 minute ago
34 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
34 minute ago
41 minute ago