Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 மார்ச் 17 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூட்டு எதிரணியினரால் நடத்தப்படும் மக்கள் பொதுக் கூட்டமொன்று கொழும்பு ஹைட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் தலைமை, அறிவித்திருந்த நிலையிலும், அக்கட்சியின் உறுப்பினர்கள் பலர், அதில் கலந்துகொண்டுள்ளனர்.
சு.க.வின் உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, குமார வெல்கம, மஹிந்தானந்த அலுத்கமகே, பவித்ரா வன்னியாரச்சி, டி.பீ.ரத்நாயக்க, ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும, காமினி லொக்குகே, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரவீரவும், கூட்டு எதிரணியின் மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago