2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஹெல உறுமயவில் மாற்றம்

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர், கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.

கொழும்பு, சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்ற கட்சியின் மாநாட்டில் வைத்தே, கட்சியின் தலைமை பதவியிலிருந்து தான் விலகிக்கொள்வதாக அவர் அறிவித்தார்.

இதேவேளை, ஹெடிகல்லே விமலசார தேரர் மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கரு பரணவித்தான ஆகியோர் கட்சியின் இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை, அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க, தொடர்ந்தும் அப்பதவியில் இருப்பார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .