2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஹம்பாந்தோட்டை விவகாரம்: 23 பேருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2017 ஜனவரி 08 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற உத்தரவையும் மீறி, ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ​போது கைதுசெய்யப்பட்ட  23 பேரையும், விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான், நேற்று உத்தரவிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட இவர்கள், நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதன்போது, இவர்களில் 21 ​ பேரை, நாளை 9ஆம் திகதி வரையும் ஏனைய இருவரை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தெற்கு கைத்தொழில் வலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்ற போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, கற்களை எறிந்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இதன் பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக, பொலிஸார், கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம்  மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, பொலிஸார் உள்ளிட்ட சுமார் 21பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்ததோடு இந்தச்சம்பவத்துடன் தொடர்புடைய 52 பேர், கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X