2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

ஹர்த்தால் போராட்டத்திற்கான திகதியில் மாற்றம்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட ஹர்த்தால் போராட்டத்திற்கான திகதி மாற்றப்பட்டுள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தும், இலங்கை தமிழரசு கட்சியினால் ஹர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

இந்த நிலையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இடம்பெறும் வழிபாட்டு நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்வரும் 18 ஆம் திகதி குறித்த ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X