2025 மே 05, திங்கட்கிழமை

ஹிக்கடுவையில் பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு

Editorial   / 2023 நவம்பர் 08 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிக்கடுவ நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற பிரித்தானிய பிரஜை ஒருவர் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 நாட்டிற்கு விஜயம் செய்து ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 60 வயதுடைய பிரித்தானிய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நீராடச் சென்ற போது கடல் அலையில் சிக்கிய அவரை, கடற்கரையில் உள்ள உயிர்காக்கும் படையினர் கரைக்கு அழைத்துச் சென்று பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தபோது, அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X