2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதால் 10 இராணுவத்தினர் காயம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 23 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                 (முறாசில்)

திருகோணமலை, மூதூர் முச்சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உழவு இயந்திரமொன்று விபத்துக்குள்ளானதில் 10 இராணுவத்தினர்  காயமடைந்துள்ளனர்.

மணல் அகழ்வதற்காக மூதூர் கட்டைபறிச்சான் இராணுவ முகாமிலிருந்து கங்கைப்  பிரதேசத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த  இந்த உழவு இயந்திரம் முச்சந்தியில் திரும்பும்போது சரிந்து  விபத்திற்குள்ளானது.

இதன்போது உழவு இயந்திரத்தின் பெட்டிக்குள் சிக்கியிருந்த இராணுவத்தினரை பொதுமக்கள் மீட்டு மூதூர் பொதுவைத்தியசாலையில் அனுமதித்ததாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .