2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'எமது நாடு 10 மில்லியன் பைந் இரத்தத்தை கொடையாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றது'

Kogilavani   / 2012 ஜூன் 15 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்,  ரமன்)

'எமது  நாடு 10 மில்லியன் பைந் இரத்தத்தை கொடையாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றது. ஆனால்  4 மில்லியன் பைந் இரத்தமே கிடைக்கின்றது. ஒவ்வொரு கொடையாளர்களும் வருடா வருடம் குறைந்த 10 கொடையாளர்களையாவது அறிமுகம் செய்து வைக்க வேண்டும்' என  திருகோணமலை பொது வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் ஈ.ஜி.ஞானகுணாளன் இரத்த கொடை பற்றி கருத்து தெரிவித்தார்.

உலக இரத்த கொடையாளர் தினம் நேற்று வியாழக்கிழமை திருகோணமலை பொது வைத்தியசாலை இரத்த வங்கியினரால் பொது வைத்தியசாலை கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு  உரையாற்றிய இரத்த சேமிப்பு வங்கியின் பொறுப்பதிகாரி முனாஸ்,

"54 குருதிக்கொடையாளர்கள் கிரமமாக பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைகளின் போது தேவைப்படும் குருதியை கொடையாக வழங்கி வருகின்றனர். இவ்வாண்டின் இறுதிக்குள் இவ் கொடையாளர்களின் எண்ணிக்கையை 100 ஆக அதிகரிப்பதை நோக்காக கொண்டு எதிர் காலத்தில் பொது மக்களுக்கு அறிவுறுத்தும் நடைமுறைகளை மேற்கொள்ளவுள்ளோம்"  என்று தெரிவித்தார்.

இதேவேளை, திருகோணமலை பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திருமதி அ.ராஜ்மோகனம் இரத்த கொடை குறித்து கருத்துரைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், கிழக்கு  மாகாண சபை உறுப்பினர் பிரியந்த பத்தரன, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அசீஸ் ஆகியோரகலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின்போது இரத்த கொடையாளர்களது சேவையை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கொடையாளிகள் விருதகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .