2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

கண் சிகிச்கை பிரிவுக்கு 14.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 19 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்,ஸ்.கீதபொன்கலன்

திருகோணமலை லயன்ஸ் கழகத்தினால் பொது வைத்தியசாலையின் கண் சிகிச்கை பிரிவுக்கு 14.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள்   இன்று செவ்வாய்கிழமை (19) வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் 306, சி1 மாவட்ட ஆளுநர் குசும் சந்தநாயக்க பிரதம அதிதியாகவும், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மரத்துவுர் ஜயசுந்தர பண்டார கௌர விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இச்செயற்த்திட்டம் தொடர்பான நினைவு பதாதையை திறந்து வைத்ததுடன் லயன்ஸ் ஆளுநரிடமிருந்து உபகரணங்களையும்,ஆவணங்களையும் பொறுப்பேற்று அவற்றை திருகோணமலை பொது வைத்தியசாலையின் கண்சிகிச்சை நிபுணர் எச்.எம்.எஸ்.ஹேரத்திடம் கையளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .