2025 ஜூலை 28, திங்கட்கிழமை

மூதூர் வெடிவிபத்தில் 5 சிறுவர்கள் படுகாயம்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன், எஸ்.எஸ்.குமார்))

மூதூர் இறங்குதுறைக்கு அருகாமையில் தக்வா நகர் எனும் இடத்தில் கரையொதுங்கிய மர்ம பொருளொன்று வெடித்ததில் 5 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது...

மூதூர் இறங்குதுறைக்கு அருகாமையில் தக்வா நகர் எனும் இடத்தில் இன்று சனிக்கிழமை காலை 9.45 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், அங்கிருந்த இரும்புப் பொருளொன்றை உடைத்திருக்கின்றனர். அச்சமயம் அப்பொருள் வெடித்ததால் அருகிலிருந்த 5 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயப்பட்ட சிறுவர்களை உடனடியாக மூதூர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முஜாதீன் ஷர்வான் (வயது 8), நஜீர் சல்மான் (வயது 10), நசீர் சாதிக் (வயது 5), நஜித் சர்கான் (வயது 3), ராஸிக் இம்ரான் (வயது 9) ஆகிய சிறுவர்களே மேற்படி வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் அடங்குவர்.

இவ்வெடிப்பு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X