2025 ஜூலை 28, திங்கட்கிழமை

திருமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் 87ஆவது கல்லூரி தினம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் 87ஆவது  கல்லூரி தினமும், ஆசிரியர் தின விழவும் நேற்று புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வுப்ல் திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளர் கே.முருகுப்பிள்ளை பிரதம அதிதியாகவும் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபர் மா.இராசரெத்தினம் கௌரவ விருந்தினராகவும், வைத்திய கலாநிதி சிவபிரியா திருக்குமார் விசேட விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
 
அதிபர் திருமதி சுலோசனா ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இவ்விழா, பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும்  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X