2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

13ஆவது திறுத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் : ஹாபிஸ் நசீர் அஹமட்

Administrator   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்
வடக்கு, கிழக்கில் சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ள காணிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர 13ஆவது திறுத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நீண்ட காலம் புரையோடிப்போயிருந்த இனப்பிரச்சனைக்கு ஓரளவேனும் தீர்வைக்காணும் வகையில் கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த கால அரசுகள் பின்னின்றன.

அத்துடன் இது சம்மந்தமாக சிறுபான்மைச் சமூகங்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தபோது அவற்றை செவிமடுக்காது இழுத்தடிப்புச்செய்யப்பட்டு வந்தது.
என்றார்.

மேலும்,அமைச்சரவையில் உள்ள தமிழ் சகோதரர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இதனை ஏற்றுக்கொண்டனர்.

கடந்தகால மாகாண அரசு போலன்றி தற்போது பதவியில் இருக்கும் மாகாண அரசு நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் இதய சுத்தியையும் கொண்டு இயங்குவதை ஒவ்வொருவரின் மனச்சாட்சியைத் தொட்டுப் பார்த்தால் விளங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .