2025 ஜூலை 31, வியாழக்கிழமை

38ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு

Thipaan   / 2016 ஜூலை 04 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா, ஏ.எம்.ஏ. பரீட்

திருகோணமலை-றோட்டரிக் கழகத்தின் 38ஆவது தலைவர் பதவியேற்பு நிகழ்வு டைக் வீதியில் உள்ள றோட்டரி அலுவலகத்தில், நேற்றிரவு (03)  இடம் பெற்றது

திருகோணமலை றொட்டரிக் கழகத்தின் 38ஆவது தலைவராக எஸ். சிவசங்கர் நியமிக்கப்பட்டார். இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் பொது முகாமையாளர் இ. குகப்பிரியா கலந்து கொண்டார்.

இதன்போது கடந்த ஆண்டின் தலைவர் கிறிஸ்ரி ஐபோ புதிதாக தெரிவான தலைவர் எஸ்.சிவசங்கருக்கு  தலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இவ் வைபவத்தில் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் ஜே.டபிள்யூ.லப்பன் ஒரு புதிய ரொடேரியன் ஆக சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

இதன் போது சென்னை, தமிழ்நாடு மவுண்ட் றோட்டரி கழகத்தின் சார்பாக மூதூர் பள்ளிக்குடியிருப்பு இந்துக்கல்லூரிக்கு புதிய கணினிகள் ஐந்து கையளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .