Suganthini Ratnam / 2016 ஜனவரி 11 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேரையும் இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராசா, இன்று திங்கட்கிழமை மீண்டும் உத்தரவிட்டார்.
இந்தியாவின் தமிழ்நாடு, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இந்த மீனவர்கள் 29 பேரும் கடந்த மாதம் 29ஆம் திகதி கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, கடந்த 30ஆம் திகதி இவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, இம்மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
21 minute ago
30 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
30 minute ago
42 minute ago