2025 ஜூலை 31, வியாழக்கிழமை

இலவச வைத்திய முகாம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 15 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

இலவச சுதேச வைத்திய முகாம் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை, கப்பல்துறையில் அமைந்துள்ள பஞ்சகர்ம வைத்தியசாலையால் நடத்தப்படவுள்ளது.

திருகோணமலை -கண்டி வீதியில் அமைந்துள்ள திஃவிபுலானந்தா கல்லூரியில் இடம்பெறவுள்ள இந்த வைத்திய முகாம் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

முழுமையான இயற்கை முறையிலான எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாத சிகிச்சை முறையால் நோய்களை தீர்க்கும் நடைமுறையில் இயங்கிவரும் கப்பல் துறை ஆயுர்வேத வைத்தியசாலையில் வளாகத்தில் இயங்கிவரும் பஞ்சகர்ம வைத்தியசாலை இந்த இலவச வைத்திய முகாமை நடத்துகிறது.

இதில் பயன் பெற விரும்புவோர் நாளை ஞாயிற்றுக்கிழமை தமது சேவையை பெற முடியும் என ஒழுங்கமைப்பாளர்களால் தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .