Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதூர்தீன் சியானா
அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரமானியம், உண்மையான விவசாயிகளுக்கு சென்றடையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
மாவட்ட செயலகத்தில் இன்று (06) நடைபெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
விவசாயிகளுக்கு விண்ணப் படிவங்களை சரியான முறையில் பூர்த்தி செய்து ஒப்படைப்பது தொடர்பில் தெளிவுபடுத்தல் வேண்டும். இதன் மூலம் விண்ணப்பித்த விவசாயிகளுக்கான உரமானியம் கிரமமான முறையில் கிடைக்கும் என்றும் அதிகமான விவசாயிகள் சரியான முறையில் உரமானிய விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்யாமை உரமானிய கொடுப்பனவு தாமதம் அடைய காரணமாக அமைவதாகவும் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மாவட்ட நீர்ப்பாசன நிலைவரம், அரசநெல் கொள்வனவு, உப உணவுப் பயிர்ச்செய்கைகளின் போக்கு உட்பட விவசாயத்தோடு தொடர்புடைய பல விடயங்களும் இதன்போது ஆராயப்பட்டன.
இக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.எம்.பி.எம்.அஸார் உட்பட திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
24 minute ago
31 minute ago
36 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
36 minute ago
45 minute ago