Niroshini / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
தெற்காசியாவிலேய மிகக்குறைந்த பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் உள்ள நாடாக இலங்கை காணப்படுகின்றது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சகல கட்சிகளும் அதிகமான பெண்களுக்கு வேட்பாளர்களாக வாய்ப்பு வழங்குவதன் மூலம் இந்த நிலையை மாற்றமுடியும் என திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாசம் தெரிவித்தது.
இது தொடர்பில் அவ்வமைப்பு இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
நாடாளுமன்றத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வெறும் 12 பேர் மாத்திரமே பெண்கள் காணப்படுகின்றனர். அதிலும் மிகக் கூடுதலான பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் வாழும் வடக்கு, கிழக்கு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி 02 பெண்கள் மட்டுமே உள்ளனர்.
மேலும், நாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் 1.9 வீதமான பெண்கள் மட்டுமே அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர். இந்தநிலை அபிவிருத்தி அடைந்து வரும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆரோக்கியமானதாக அமையாது.
எனவே, எமது நாட்டில் உள்ள ஜனநாயக அரசியல் கட்சிகள் அனைத்தும் பெண்களுக்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது, அதிகமான வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களைப் பொறுத்த வரையில் அதிகமான உட்கட்டமைப்பு மற்றும் கிராமங்களின் பராமரிப்பு போன்ற அநேக விடயங்களில் பெண்கள் நேரடியாக சம்பந்தப்படுகின்றனர்.
ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளிலும் அண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக வாக்களிக்கின்றனர். ஆயினும், கட்சிகள் வழங்கும் வேட்பாளர் இட ஒதுக்கீட்டில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்குவது மிகவும் அரிதாக காணப்படுகிறது. அது எந்த வகையில் நியாயமாகும்.
இவ்வாறான நிலையில் தகுதியுடைய பெண்களுக்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது கடந்த காலங்களை விட அதிகமான இட ஒதுக்கீட்டை வழங்கி, ஊழலற்ற அரசியல் கலாசாரம் ஒன்றை ஏற்படுத்த வழிவகுப்போம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
13 minute ago
21 minute ago
30 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
30 minute ago
42 minute ago