Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஜூலை 02 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
“கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு தனிமனிதனும் இனம் என்ற ரீதியிலோ மதம் என்ற ரீதியிலோ பாதிக்கப்படக் கூடாது. மனிதன் என்ற ரீதியில் அவருக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்ற உணர்வைக் கொண்டவர்தான் தற்போதைய ஆளுநர். அதன் அடிப்படையிலேதான் மிகச் சிறந்த நிர்வாக முறைக்கு கிழக்கு மாகாணம் சென்று கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது” என கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் தெரிவித்தார்.
திருகோணமலை கலாசார மண்டபத்தில் வியாழக்கிழமை(30) கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடத்திய இப்தார் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“கிழக்கு மாகாண ஆளுநர் எங்களை சந்திக்கின்ற போதெல்லாம் கிழக்கு மாகாணத்தை இன,மத என்ற வேறுபாடற்ற ஒரு கல்விச் சமூகத்தை இந்த மாகாணத்தில் உருவாக்க வேண்டும் என்பார்.
தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் அதற்காக அர்ப்பணிப்புடன் கடமையாற்றுகின்றமையை அவரது செயற்பாடுகளில் இருந்து புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
இது தவிர கல்வித் துறை சார்ந்த விடயங்களிலும் எங்கு நலிவடைந்த தேவையுடைய மாணவர்களும் பாடசாலைகளும் இருக்கின்றனவோ அந்தப்பாடசாலைகளுக்கம் மாணவர்களுக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக ஆளுநர் யெற்பட்டுக் கொண்டிருக்கிறார்.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள காரியாலயத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் மிகச் சொற்ப அளவே இருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து இந்தப் பிரமாண்டமான இப்தார் நிகழ்வை எங்களது சகோதர இனத்தவர்கள் முழு மூச்சாக நின்று ஏற்பாடு செய்திருப்பதானது இந்த மாகாணத்தில் இனிமேல் இன, மத ரீதியான விரிசல்களுக்கு இனிமேல் இடம் இருக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கின்றது” என்றார்.
“மதம் ஒரு மனிதனை நேர்வழிப்படுத்தும் மிகப் பெரிய வேலையைச் செய்கிறது. கலாசாரம் என்பது ஒரு சமூதாயத்தின் அடையாளமாக இருக்கின்றது. இந்த மதமும் கலாசாரமும் மனித இனத்தைப் பிரிப்பதற்காக அன்றி, தனித்துவமான அடையாளங்களோடு உருவான பல்வேறு கலாசாரங்களோடு வாழும் குழுக்களை ஒன்றிணைத்து, புரிந்துணர்வுடன் வாழ கற்றுக் கொடுக்கின்றது” என்றும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago