Thipaan / 2016 ஜூன் 28 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
திருகோணமலை, கந்தளாவ யுனிட் - 16 பகுதியில், 1 கிலோகிராம் கஞ்சாவை வைத்திருந்த 33 வயதுடைய பெண் ஒருவரை, இன்று (28) மாலை 3 மணியளவில் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த கந்தளாய் சிறு குற்றத்தடுப்பு பொலிஸார், அவரிடமிருந்து கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
குறித்த பெண், கஞ்சா வைத்திருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, பொலிஸார் அவ்விடத்துக்கு விரைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போது அவரது வீட்டிலிருந்து கஞ்சாவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
அந்தப் பெண்ணை, நாளை புதன்கிழமை, கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கந்தளாய் சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
47 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
21 Mar 2026