Thipaan / 2016 ஜூன் 14 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா
'எமது ஊழியர்களின் குடும்ப நிகழ்வுகளில், மதுபாவனையைத் தவிர்த்து வருகின்றோம். ஆனாலும், சில வீடுகளிலுள்ள பெண்கள், கட்டாயம் விசேட நிகழ்வுகளுக்கு மதுபானங்களை வாங்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்' என சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பாளர் கேணல் திலகரட்ண தெரிவித்தார்.
திருகோணமலை, கோமரங்கடவெல சிவில் பாதுகாப்பு திணைக்களமும் மொறவௌ பொலிஸாரும் மஹதிவுல்வௌ சிங்கள மஹா வித்தியால மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து ஏற்பாடு செய்த, போதையை ஒழிப்போம் எனும் நடைபவனி, நேற்று (13) நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த காலங்களில் விஷேட நிகழ்வுகளின் போது மதுபானங்கள் கட்டாயம் வழங்கப்பட்டன. தற்பொழுது வழங்காவிட்டால் உறவினர்கள் கோபிக்கக் கூடிய நிலைமை ஏற்படுவதாக அந்தப் பெண்கள் தெரிவிக்கின்றனர்.
அப்படியான சிந்தனைகளை மாற்ற வேண்டும். மதுபானத்தினால் ஏற்படுகின்ற விளைவுகளை பற்றி நாம் விளக்க வேண்டும். இவ்வாறான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தவும் விழுப்புணர்வுகளை ஏற்படுத்தவுமே எமது திணைக்களத்தில் ஒரு குழுவொன்றினை அமைத்திருக்கிறோம்.
கிராம மட்டங்களில் போதைப்பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. இதனை கட்டுப்படுத்தவும் இல்லாமல் ஒழிக்கவுமே, நாம், பாடசாலை மாணவர்களின் ஊடாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வுபடுத்தி வருகின்றோம். அனைவும் ஒன்று பட்டு போதைப்பொருட்களை ஒழிக்க முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன்' எனவும் தெரிவித்தார்.
'கிராமங்களில் போதைகளை இல்லாதொழிப்போம்' 'வாழ்வை செழிப்படையச்செய்வோம்' 'போதைகளை வழங்கி குடும்பத்தை பாழாக்காதே' போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் மொறவௌ பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீதிகளினூடாக மக்களுக்கு விழிப்பூட்டியதுடன், கடைகளில் சிகரெட்டுக்களை விற்க வேண்டாம் எனவும் மாணவர்கள் கடை உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிகழ்வில் மொறவௌ பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.டி.என்.குலதுங்க, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கோமரங்கடவெல பிரதேச பொறுப்பாளர் கேணல் திலகரட்ண, மஹதிவுல்வௌ சிங்கள மஹா வித்தியாலயத்தின் அதிபர் எம்.தர்மசேன மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


12 minute ago
26 minute ago
41 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
41 minute ago
58 minute ago