2026 மார்ச் 23, திங்கட்கிழமை

200 குடும்பங்களுக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டத்தில் குடிசைகளில் வாழ்கின்ற 200 குடும்பங்களுக்கு கல் வீடுகளைக் கட்டுவதற்காக முதற்கட்டமாக 20,000 ரூபாய் பெறுமதியான காசோலைகள் மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

அவ்வப் பிரதேச செயலகங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட இக்குடும்பங்களுக்கு பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில்;, மூன்று கட்டங்களாக நிதியுதவி வழங்கப்படவுள்ளது. தலா குடும்பத்துக்கு மொத்தமாக 50,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

மொறவெவவில்; 12 பேரும் தம்பலகாமத்தில்; 17 பேரும் வெருகலில் 14 பேரும் கிண்ணியாவில் 09 பேரும் குச்சவெளியில் 14 பேரும் சேருவிலவில் 19 பேரும் கந்தளாயில் 35 பேரும்  பதவிசிறிபுரவில் 32 பேரும் கோமரங்கடவெலவில் 17 பேரும் திருகோணமலை பட்டணமும் சூழலில்; 22 பேரும் மூதூரில்; 09 பேரும் இதற்காக தெரிவுசெய்யப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .