Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜூலை 19 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
திருகோணமலை, கந்தளாய் தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லீலாரத்ன மாவத்தையைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவர், 500 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இன்று (19) காலை 11.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார் என கந்தளாய் தலைமை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்தநபர் கஞ்சா வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, அப்பெண்ணின் வீட்டுக்கு விரைந்த பொலிஸார் நடாத்திய தேடுதல் நடவடிக்கையில், அவரிடம் கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றமிழைத்த நபர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, நாளை புதன்கிழமை (20) கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கந்தளாய் தலைமை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .