2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

6.045 கிலோகிராம் வெடிமருந்துடன் மூவர் கைது

Thipaan   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, கிண்ணியாவில் சட்டவிரோதமான முறையில் 6 கிலோகிராம் 45 கிராம் வெடிமருந்துகளை வைத்திருந்த மூவரை, நேற்றுச் சனிக்கிழமை (08) மாலை கைது செய்துள்ளதாக திருகோணமலை குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா மற்றும் மூதூர் பகுதியைச் சேர்ந்த 57, 55, 48 வயதுகளையுடைய மூவரையே கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.         

குறித்த சந்தேகநபர்கள், வெடிமருந்துகளை வைத்திருப்பதாக திருகோணமலை குற்றத்தடுப்புப் பொலிஸாருக்கு கிடைத்ததகவலின் அடிப்படையிலேயே அவர்களைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X