2026 மார்ச் 23, திங்கட்கிழமை

'குளங்களுக்கான பராமரிப்புப் பணிகள் கி.மா. நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 15 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் ,ஸ்மாயில், பதுர்தீன் சியானா

கிழக்கு மாகாண நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் நிர்வாக, பராமரிப்புப் பணிகளை அம்மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கான அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை அமர்வு, திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாகாணசபை அலுவலகத்தில்;  தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.நடராசா 'கிராமியக் குளங்களை புனரமைத்தல்,  மேற்பார்வை செய்வதற்கான பணிகளை மாகாண சபைக்கு வழங்க வேண்டும்' என்ற தலைப்பில்  தனிநபர் பிரேரணையை முன்வைத்தார். இந்தப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'கிழக்கு மாகாண நிர்வாக எல்லைக்குள் 1,116 சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் 347 குளங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 380 குளங்களும் திருகோணமலை மாவட்டத்தில் 389 குளங்களும் உள்ளன. இந்தக் குளங்களின் மூலமாக 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்புக்கு நீர்ப்பாசனம் வழங்கக்கூடிய மத்தியதர குளங்களும் உள்ளன' என்றார்.  

'சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் நிர்வாகம், பராமரிப்புப் பணிகளை கமநல அபிவிருத்தி திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. எனவே, சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் நிர்வாக, பராமரிப்புப் பணிகள் கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்டு, கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்படி குளங்களை நிர்வகிக்க மாகாண சபை அவசர நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும்' என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .