Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 19 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், எப்.முபாரக்
கிழக்கு மாகாணத்தில்; பாரிய கைத்தொழிற்பேட்டை ஒன்றை உருவாக்கும் ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தமிழ்நாடு சிறுகைத்தொழில் ஊக்குவிப்புச் சங்கத்தின் தொழில் அதிபர்கள் தெரிவித்தனர்.
சகல வளங்களையும் கிழக்கு மாகாணம் கொண்டமைந்துள்ளமையால், இம்மாகாணத்தில் தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கு உகந்தது எனவும் அவர்கள் கூறினர்.
தென்னிந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுகைத்தொழில் ஊக்குவிப்புச் சங்கத்தின் தலைவர் எஸ்.முத்துசாமி தலைமையிலான குழுவினருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கும் இடையிலான சந்திப்பு, முதலமைச்சர்; செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, கல்வியை இடைநடுவில் விட்டு வெளிநாடுகளில் பணிப்பெண்களாகவும் துப்புரவுத் தொழிலாளர்களாகவும் இருக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க இம்மாகாணத்தில்; கைத்தொழிற்பேட்டைகளை உருவாக்குதல் சம்மந்தமாக கலந்துரையாடியதாகவும் முதலமைச்சர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .