Thipaan / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்
கருமலையூற்று பள்ளிவாயலின் புனர்நிர்மாணப் பணிகளை தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் ஆரம்பித்து வைப்பார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாhளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்
கடந்த பல தசாப்தங்களாக, மிகவும் சேசமடைந்து காணப்பட்ட கருமலையூற்று வீதியின் புனர்நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
'என்னைப் பொறுத்தவரை, இந்த நாள், கருமலையூற்று வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள் என்றே கூறுவேன். ஏனெனில், பல தசாப்தங்களாக அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் காட்சிப்பொருளாக மட்டுமே இவ்வீதி காணப்பட்டது.
நான் மாகாண சபை உறுப்பினராக இருந்த காலம் முதல் இவ்வீதியின் புனர்நிர்மாணத்துகான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அம்முயற்சி இன்று வெற்றியளித்துள்ளது.
கருமலையூற்று பள்ளிவாயல் கடந்த காலங்களில் சர்வதேச ரீதியில் பேசப்பட்ட பள்ளிவாயல், இப்பள்ளிவாயல் தொடர்பான பிரச்சினையை, கடந்த மாதம் என்னுடன் ஹஜ் பயணத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஹலீமுடன் பேசினேன்.
அமைச்சர், விரைவில் திருகோணமலைக்கு விஜயம் செய்வதாகவும் அவர் வருகைதரும் போது இதன் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துவைப்பதாகவும் என்னிடம் வாக்குறுதியளித்துள்ளார்' என, அவர் தெரிவித்தார்.

7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026