Niroshini / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
கல்வி கற்பதன் மூலமாகவே தமது பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும்.கல்வி ஒரு மனிதனின் உயர்வுக்கு இன்றியமையாதது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சேருவில தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான வைத்தியர் அருண சிறிசேன தெரிவித்தார்.
கந்தளாயில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அருணலுவ வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற மாணவர்களுக்கான இலவச கணிதப்பாட கருத்தரங்கினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
இந்நாட்டில் கடந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்ட நிதியை விடவும் கூடுதலான நிதி கல்விக்காக வழங்கப்படுகின்றது.இதன் மூலம் இவ்வாறான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வியை கற்க வேண்டும்.
ஒவ்வொரு பரீட்சைகளிலும் தங்களால் இயன்ற திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்றார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago