Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
'கல்விக்காக வேண்டி எதைச் செய்யவும் நான் தயங்கப் போவதில்லை. திருகோணமலை மாவட்ட பாடசாலைகளின் அபிவிருத்திகளைத் துரித கதியில் மேற்கொள்வேன்' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டொக்டர் அருண சிறிசேன தெரிவித்தார்.
இம்முறை ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள, கந்தளாய் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலை மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு கந்தளாய் அல் தாரிக் மகா வித்தியாலயத்தில், ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எனது சிறு பராயம் பொருளாதார வளங்கள் குன்றியதாகவே காணப்பட்டது. அக்காலத்திலே கற்று வைத்தியராக வந்த நான், இன்று கல்விக்காக வேண்டி பல உதவிகளைச் சாதி பேதம் பாராது மேற்கொண்டு வருகின்றேன். திருகோணமலை மாவட்டம் கல்வியில் முன்னேற வேண்டும்.
கந்தளாய் கல்வி வலயத்தில் அதிகமான சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகளில் பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அதனைக் கூடிய விரைவில் நிவர்த்தி செய்து வைப்பேன்.
இலங்கையின் கல்வி அமைச்சராக துடிப்புள்ள ஒருவர் இருந்து வருகின்றார். அவரிடம் பிரச்சினைகளை முன்வைத்தால், நிவர்த்திக்க கூடியதாக இருக்கும்.
கல்வியொன்றே, ஒரு மனிதனை பூரணமாக்கும் அதற்கான பணிகளையும் பயிற்சிகளையும் நாம் பெற வேண்டும். கல்வியை முதற்கடமையாக கொண்டு மாணவர்கள் கற்று வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றார்.
31 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
32 minute ago
2 hours ago