Suganthini Ratnam / 2016 ஜனவரி 17 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட சுனாமி வீட்டுத்திட்டங்கள் அனைத்;தும் தன்னைப் பொறுத்தவரையில் தோல்வியே. ஏனெனில், அவ்வீட்டுத் திட்டங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை தற்போது வாழும் மக்களுக்கு பல்வேறு அசௌகரிகங்களை ஏற்படுகின்றது. மேலும், சில இடங்களில் இவ்வீட்டுத் திட்டங்களில் சுனாமியில் பாதிக்கப்படாத சிலர் வாழ்ந்து வருவதையும் அவதானிக்க முடிகிறது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தெரிவித்தார்.
திருகோணமலை கோணேசபுரி சுனாமிக் குடியிருப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நூலகத் திறப்பு விழா நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'சுனாமியால் இழந்த உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் நிவாரணமாக அரசாங்கமும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் அமைத்துக்கொடுத்த இந்த வீட்டுத்திட்டங்களில்; பல குறைபாடுகளை அனைத்து மாவட்டங்களிலும் காண முடிகிறது இவற்றை சீரமைக்கும் செயற்பாடுகளை மாவட்ட செயலகங்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் கரிசனை காட்ட வேண்டும்.
அத்துடன், இவ்வாறான சுனாமி வீ;ட்டுத்தொகுதி உள்ள இடங்களில் அமைந்துள்ள பொதுக்கட்டடங்கள் பயன்படுத்தப்படாமல் பழுதடைந்தும் பல இடங்களில் காணப்படுகிறது. ஆயினும், கோணேசபுரி மக்கள் அதனை பயன்படுத்த பல்வேறு சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன' என்றார்.
இதன்போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணியினால் இந்த நூலகத்திற்கென வழங்கிய 50 ஆயிரம் ரூபாய் பொறுமதியான புத்தகங்களும் கையளிக்கப்பட்டதுடன், நூலக அங்கத்துவ அட்டைகளும் பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டன.

23 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago