2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

'சூழுலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளையும் விளைவுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்'

Princiya Dixci   / 2016 ஜூன் 02 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

'திருகோணமலை மாவட்டத்தில், சூழுலுக்கு ஏற்பட்டு வருகின்ற பாதிப்புகளையும் விளைவுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால், பல விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்' என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.

உப்புக்காற்று ஆணவப்பட வெளியீடு, திருகோணமலை ஜேகப் பார்க் விடுதியில், இன்று வியாழக்கிழமை (02) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளின் சுற்றுப்புறச் சூழல்களையும் உள்ளூராட்சி மன்றங்கள்தான் கையாள வேண்டும். மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் ஆகியோர் இவ்விடயத்தில் அக்கறைகாட்டவேண்டும்.

பிரதேச மக்களின் ஒத்துழைப்புகளும் இதில் இருக்க வேண்டியதோடு, சசல விடயங்களும் அவர்களாலேயே முன்னெடுக்கப்பட வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தின் சல்லி, சிவபுரி, புல்மோட்டை, நிலாவெளி, மூதூர் மற்றும் கரையோரப் பகுதிகளைக் கொண்ட அனைத்துப் பிரதேசங்களும் சீர்படுத்தப்பட வேண்டும்.

குப்பைகள் நிறைவதால், பல்வேறு வகையான நோய்கள் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இதுபற்றி, உள்ளூராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

மக்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டியதோடு, இந்த உப்புக்காற்று ஆவணப்படத்தை பொது மக்களுக்குக் காட்டி, அதனூடாக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம், சுற்றுச் சூழலுக்கு புத்துயிரளித்து வருகின்றது. அத்தோடு, சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் நடப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்விடயத்தில் ஜனாதிபதி அக்கறை காட்டி வருகின்றார்.

சூழலுக்கான புதிய சட்ட திட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், சூழலுக்கான பாதிப்புக்களே ஏற்படுத்தப்பட்டன.  காடுகளை அழிப்பது, கடலை மூடுவது, மண் அகழ்வது மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு இடமளிப்பது போன்ற செயற்பாடுகள் நடைபெற்று வந்தன' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X