Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 மார்ச் 26 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில்; 'எதிர்காலம் உதயமானது' எனும் தொனிப்பொருளில் யொவுன்புர நிகழ்வு திருகோணமலை மெக்கெய்ஷர் விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்காக 150 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.ஏ.எஸ்.கீரகல தெரிவித்தார்.
இந்நிகழ்வு தொடர்பாக ஊடவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் மேற்படி விளையாட்டு மைதானத்தில் நேற்று (26) நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
26 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 6,000 இளைஞர், யுவதிகள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது இளைஞர், யுவதிகளுக்கு தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான புரிந்துணர்வையும் அனுபவங்களையும் பரிமாறுவதற்கும் அபிவிருத்தித் துறைசார் நடவடிக்கைகள் தொடர்பாக வெளிநாட்டு இளைஞர், யுவதிகளுடன் அனுபவங்களை பரிமாறுவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
இளைஞர், யுவதிகளுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்வி, விளையாட்டு கலாசாரம், பொழுதுபோக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளுக்கு சந்தர்ப்பத்தை பெற்றுத்கொடுப்பதே இந்நிகழ்வில் நோக்கமாகும் எனவும் அவர் கூறினார்.
முதலாவது யொவுன்புர நிகழ்வு 1984ஆம் ஆண்டு பொலன்னறுவையிலும் இரண்டாவது யொவுன்புர நிகழ்வு 27 வருடங்களின் பின்னர் 2016ஆம் ஆண்டு மாத்தளையில் 5,000 இளைஞர், யுவதிகள் பங்குபற்றலுடன் நடைபெற்றன. மூன்றாவது திருகோணமலையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago