Gavitha / 2017 மே 06 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், நெல் மூடைகள் ஐந்தைத் திருடிய சந்தேகநபர் ஒருவரை, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற பதில் நீதவான் எம்.எஸ்.முதார், இன்று (06) உத்தரவிட்டார்.
கந்தளாய், ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வீடொன்றில் வெளியில் அடுக்கி வைத்திருந்த ஐந்து நெல் மூடைகளைத் திருடியதாக, குறித்த சந்தேக நபருக்கெதிராக செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, இன்று காலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரை, பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
41 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
4 hours ago