Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூன் 18 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை மாவட்டத்தில் அனுமதிப்பத்திரம் இல்லாத பாடசாலைகளுக்கு அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட சகல கல்விப்பணிப்பாளர்களுக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“திருகோணமலை மாவட்ட பாடசாலைகளுக்குச் சொந்தமான காணிகளை சரியான முறையில் நில அளவை செய்யப்படாத காரணத்தினால் மைதானப்புணரமைப்பு மற்றும் நிரந்தர அபிவிருத்தி வேலைகளை செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இவ்வாறான பாடசாலைக்காணிகள் பிறரால் ஆக்கிரமிக்கப்படுகின்ற காரணத்தால் அவற்றை பாடசாலைக்கு உரித்துடையதாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவையாகவும் உள்ளது.
இம்மாவட்டத்தில் காணி அனுமதிப்பத்திரம் இல்லாத பாடசாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதற்கமைவாக நில அளவை திணைக்களம் மூலம் நில அளவை செய்து காணி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், காணி அனுமதிப்பத்திரம் இல்லாத பாடசாலை குறித்து விபரங்களை அப்பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago