Thipaan / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாரம்பரிய ஆலயங்களை, அப்பகுதி மக்களிடமே கொடுப்பதற்கு, நல்லாட்சி அரசாங்கமும் இந்துசமய விவகார அமைச்சரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, மூதூர் இந்து குருமார் சங்கம் தெரிவித்துள்ளது.
மூதூர் இந்து குருமார் சங்கத்தினால் நேற்று (10) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த யுத்தம் முடிவுற்ற பிற்பாடு மக்கள் கட்டம் கட்டமாகக் குடியேற்றப்பட்டாலும் சம்பூர் ஸ்ரீ முருகன் ஆலயம் இன்னும் மக்களின் வழிபாட்டுக்காக வழங்கப்படாமல், கடல்படையினரின் வசம் உள்ளது.
அதேபோல், வெருகல் பிரதேசத்துக்குட்பட்ட கல்லடி நீலீ அம்மன் ஆலயம் மலையில் இருந்தது. இது உடைக்கப்பட்டு, 2009ஆம் ஆண்டு முதல் அந்த இடத்தில் பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளதுடன், அங்கு இருக்கின்ற பௌத்த மத குருவானவர் படைதரப்பின் உதவியோடு ஆலயத்துக்குரிய காணி மற்றும் சில மக்களுடைய காணியையும் சுவிகரித்து பாதுகாப்பு வேலிகள் போட்டுள்ளார்.
தற்போது வீதியோரமாகவுள்ள மிகக் குறுகிய இடத்தில் மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மக்கள், ஆலயத்தைச் சுற்றி வருவதற்கு கூட முடியாத அளவுக்கு பாரிய கற்களால் மதில் போடபட்டுள்ளது.
இந்த ஆலயம், 1835ஆம் ஆண்டு முதல் வரலாறு உள்ளதை ஊரவரும் நிருவாகிகளும் சுட்டிகாட்டுகின்றனர்.
இப்படி இருக்கையில், இது ஒரு மனிதனின் மதவழிபாட்டை மீறுகின்ற செயலாகும் என்பதோடு இதற்குச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆகவே, இந்த நல்லாட்சி காலத்திலாவது மக்களுக்கு மதவழிபாட்டுகான உரிமையும் அவர்களுடைய பாரம்பரிய ஆலயங்களையும் விட்டு கொடுத்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என, அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026