Thipaan / 2016 ஜூன் 26 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
புல்மோட்டை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் ஜன்னல் கம்பியை வெட்டி நுழைந்த இனந்தெரியாத நபர்களால், அந்த வீட்டிலிருந்த 3 பவுண் தங்கச் சங்கிலி கொள்ளையிடப்பட்டுள்ளதாக, புல்மோட்டை பொலிஸார், நேற்று சனிக்கிழமை (25) தெரிவித்தனர்.
வீட்டுக்காரர்கள், வெள்ளிக்கிழமை (24) இரவு வீட்டு ஜன்னலை திறந்து வைத்து உறங்கியுள்ளனர்.
இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்திய திருடர்கள், கூரிய ஆயுதங்களினால் ஜன்னல் கம்பியை வெட்டி, வீட்டினுள் நுழைந்து உறங்கி கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த 3 பவுண் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
வீட்டு உரிமையாளரினால், சனிக்கிழமை காலை புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
33 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago