Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மே 15 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இந்திவெவக் குளம் விமானப் படையினருக்குச் சொந்தமானது இல்லை என்பதுடன், மீனவர்களின் நலன் கருதியே இந்தக் குளம் புனரமைக்கப்பட்டது என பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவப் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தெரிவித்தார்.
மொறவெவ பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், சனிக்கிழமை (14) நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
இந்திவெவக் குளம், மொறவெவ விமானப் படையினருக்குச் சொந்தமானது என்று தெரிவித்து மஹதிவுள்வெவ மீனவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பிரதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதன்போது, இந்திவௌக் குளத்தில் மீன் பிடிப்பதற்கு மீனவர்களுக்கு அனுமதி வழங்குமாறும் மீனவரைத் தாக்கியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு பிரதி அமைச்சர் பணித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த அரசாங்கத்தில் தான் மீன்பிடி பிரதி அமைச்சராக இருந்தபோது, அக்குளம் மீனவர்களின் நலன் கருதி புனரமைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்தக் குளத்தில் மீன் குஞ்சுகளை விடுவதற்காக சங்கங்களுக்கு மீன் குஞ்சுகள் வழங்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago