Suganthini Ratnam / 2016 ஜனவரி 08 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
முப்பது வருட யுத்தத்தின் பின்பு மூவின மக்களும் சந்தோஷமாக, ஒற்றுமையாக வாழ்வதற்கு அமைத்துக் கொடுத்தது நல்லாட்சி அரசாங்கமே என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதையொட்டி மூதூரில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு நாட்டில் அராஜக ஆட்சி நிலவியது. அவ்வாட்சியை முறியடித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம்; காங்கிரஸுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிபீடம் ஏறினார்.
கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தார்கள். தற்போது நல்லாட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள். தற்போது மக்களின் அன்றாட வாழ்க்கைச் சுமை குறைக்கப்பட்டுள்ளது' என்றார்.
13 minute ago
21 minute ago
30 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
30 minute ago
42 minute ago