Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூன் 18 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
“ஆரம்ப காலங்களில் மக்கள் இரசாயன கிருமிநாசினிகளின் செயற்பாடுகள் பற்றி தெரியாமல் சாப்பிட்டே வந்துள்ளார்கள். ஆனால், தற்கால விஞ்ஞான உலகில் மக்களின் உணவுப்பழக்கங்கள் மிகவும் மாறுபட்டதாகவே காணப்படுகின்றது” என சீமா நிறுவனத்தின் தலைவர் அசோக அபேகுணவர்த்தன தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் நஞ்சற்ற உணவு எனும் தொனிப்பொருளில் இன்று சனிக்கிழமை (18) திருகோணமலை ஜக்காப் பார்க் விடுதியில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறகையில்,
“இலங்கை மக்கள் வருகின்ற காலங்களில் நஞ்சற்ற உணவுகளை கையாள வேண்டும். அதாவது இன்று அனைத்து உணவு வகைகளிலும் ஏதோ ஒரு வகையில் மருந்துகள் கலக்கப்பட்டே காணப்படுகின்றது. கிராமபுரங்களில் இருக்கின்ற மக்கள் இதனை கவணிக்காமல் சாப்பிட்டே வருகின்றார்கள்.
வீடுகளில் வளர்க்கின்ற கோழிகளின் கழிவுகள் சேதனைக்குப் பயன்படுத்த முடியும் ஆனால் அதனை பாவிப்பது கிடையாது அதில் கிடைக்கின்ற கழிவுகள் பசளைகள் கிடைக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.
இலங்கை அரசு இந்த நஞ்சற்ற உணவுப் பழக்கவழக்கங்களின் வேலைத்திட்டங்களை மும்முரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது” என்றார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago